போதும்!
தலைவனை வெளியில் தேடியது
போதும்!
கண்முன்னே கண்டதை
காணாதது போல் செல்வது
போதும்!
ஈனப் பிறவியாய்
பயந்து வாழ்ந்தது
போதும்!
அற்ப ஆசைக்கு
வாழ்க்கையை அடகு வைத்தது
போதும்!
நம் வாழ்க்கையை
எவனோ எழுதிட அனுமதித்தது
போதும்!
வானத்தில் ஒளிதோன்றும்,
இறைவன் இறங்கி வருவான்
நம்மை காப்பான்,
என எண்ணிய மூட மதி
கெட்டோழிப்போம்!
நம் வாழ்க்கையை
நாமே திருத்தி எழுதுவோம்!
புறப்பட்டு வா தோழா!
நாளை உலகம்
நம் கையில் சுழலும்
No comments:
Post a Comment