ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ்
தமிழில்: அசோகன் முத்துசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும்
புத்தகத்தின் மூலம் அனைவரும் அண்ணார்ந்து பார்த்த அமெரிக்காவின் கருத்த பக்கங்களை
வெளிக்கொணர்ந்த ஜான் பெர்கின்ஸனின் அடுத்த வரவு இந்த அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவத்துக்கும்
சோசலிசத்துக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரில் முதலாளித்துவம் எப்படியெல்லாம் தன்
கொடிய கரங்ககளை விரித்து சோவியத்தை வீழ்த்திதியது பின் தன் கரங்களை நீட்டிக்கொண்டே
சென்றது என்பதை அவரது ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்
வாக்குமூலம் நூலில் பார்த்தோம்.
இந்த நூலில் அதன் விளைவுகள், அதற்காக நிகழ்த்திய படுகொலைகள்,
அரசியல் குழப்பங்கள் என அனைத்தையும் விரிவாக ஆராய்ந்து பல நபர்களை சந்தித்து
நமக்கு இந்தத் தகவல்களை கொடுத்துள்ளா.
ஒரு பெருநிறுவனத்தின் விற்பனைப் பொருளுக்கு பின் அதை உற்பத்தி
செய்த தொழிலாளி வெறும் 2 டாலர் ஊதியத்தில் அதை உற்பத்தி செய்கிறார். நாம் வாங்கும்
பொழுது அதன் விலை 200 டாலாராக இருக்கிறது. இந்தத் தொழிற்சாலை இந்த
நாட்டில் அமைய அரசியவாதிகள் அல்லது
அரசாங்கத்திடம் பேரம் பேசப்படுகிறது. போலியான வளர்ச்சித் திட்டங்களுக்கு
கடன்பட்டு அந்த நாடுகள் நிரந்தரக் கடனாளியாகி பிறகு தன் கனிம வளங்கள், ராணுவம் என
அனைத்தையும் பெருமுதலாளிகள் சுரண்டிக்கொள்கின்றன்ர்.
ஒரு நாட்டில் ஆட்சியைக் கலைக்க எவ்வாறெல்லாம் அவர்கள்
முயல்கிறார்கள் என்று மிகத் தெளிவாக எழுதியுள்ளார். இது ஏதோ உலக அரசியல் என்று
சாதாரணமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. நம் நாட்டிற்குள்ளும் இவர்கள் வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாம் உள்ளூர்
அரசியலே மூழ்கிக் கிடக்கிறோம். நம்
பிரதமர் இதுவரை 44 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒப்பந்தங்கள் கையெழுத்து
போட்டு வந்திருக்கிறார். இன்னும் போடுவார். 5 ஆண்டு கால ஆட்சி முடிவில்
என்னெவெல்லாம் நடக்கும் என்று என்னும் பொழுது தல சுத்துடா சாமீ! இதை நாம் அறிந்து முடிவெடுக்காவிட்டால்
இனொரு சோமாலியாவாக நம் நாடும் ஆக்கப்படும்.
அ. மு. நெருடா.
No comments:
Post a Comment