கனன்று எறியும் கனவுகளோடு இருக்கும் இருபத்தியாறு வயது இளைஞன் கார்ல் மார்க்ஸ், ஒருபுறம் வறுமையும், மறுபுறம் அதிகாரவர்க்கமும்
துரத்த, தன் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட தன் காதல் மனைவியோடு, உழைக்கும்
மக்களுக்கு அதிகார வர்க்கத்தின் கோரமுகத்தை கிழித்து இந்த உலகத்தின் ஈடு இணையற்ற
உழைக்கும்வர்க்கத்தின் உரிமைகளை அவர்கள் உணர, தாங்கள் எவ்வாறு அதிகார வர்க்கத்தால்
சுரண்டப்படுகிறோம் என்பதை அறியவைக்க பிரஷ்யாவிலிருந்து புறப்பட்டு தோழர்.
ஏங்கல்சின் துணையோடு 21 பிப்ரவரி 1848-இல் கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை முதன்முதலாக வெளிவருவதோடு நிறைவடைகிறது - "THE YOUNG KARL MARX
" திரைப்படம்.
ரவூல் பெக் (Raoul Peck)
மற்றும் பாஸ்கல் போனிட்சர் (Paskal
Bonitzer) திரைக்கதையில் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் "ரவூல்
பெக்". கார்ல் மார்க்ஸ் கதாப்பாத்திரத்தில் ஆகஸ்ட் டீஹல் (August Diehl) ஏங்கல்சாக ஸ்டீபன் கொனர்ஸ்கி (Stephan Konarske) மற்றும் ஜென்னியாக விக்கி க்ரீப்ஸ் (Vikcy Krieps) நடித்துள்ளனர். இசை- அலெக்சி
ஆய்கி (Alexei Aigui)
விடாது துரத்தும் வறுமையிலும் ஜென்னி -
மார்க்ஸின் வாழ்கை காதல் நிறைந்திருக்கிறது. மார்க்ஸின் இயக்கவிதி
ஜென்னியின் காதலைக் கொண்டே இயங்குகிறது. உலகத் தொழிலாளர்களின் வாழ்கையை தன் கருத்துக்களால் மாற்றியமைக்க இயன்ற மார்க்சிற்கு தன் வறுமையை
போக்க, தன் குடும்பத்தின் பசியை ஆற்ற இறுதிவரை இயலவில்லை. நன்கு படித்த, வசதிபடைத்த ஜென்னி, மார்க்ஸின் காதலுக்காக, அவர்
கொண்டுள்ள உயர்ந்த லட்சியத்துக்காக அவரோடு இணைந்து பயணிக்கிறார். குறிப்பாக
லாராவை (மார்க்ஸ்-ஜென்னியின் இரண்டாவது மகள்) பெற்றெடுக்கும் தருணத்தில் மிக இயல்பாக ஏழ்மையை முகபாவனைகளில்
காட்டிவிட்டு நகர்கிறார்.
கார்ல் மார்க்சிற்கு எந்த வித்த்திலும்
குறைவில்லாத சிந்தனையாளர் ஏங்கல்ஸ். படம் முழுக்க மார்க்ஸின் கதாப்பாத்திரம்
வியாபித்திருந்தாலும், சற்றும் குறைவில்லாத அளவில் தனது சிறந்த நடிப்பால் ஏங்கல்ஸின் கதாப்பாத்திரத்தை தூக்கி நிருத்தியிறுக்கிறார் ஸ்டீபன் கொனர்ஸ்கி.
ஏங்கல்ஸின் நட்பு மட்டும் மார்க்சிற்கு இல்லாமல் போயிருந்தால் "மூலதனம்" எனும் மார்க்ஸின் மிகச்சிறந்த படைப்பு முழுமை பெற்றிருக்காது. ஜென்னி-மார்க்ஸின் குடும்பத்திற்காகவே இறுதிவரை இருந்து
தன் உடமைகள் முழுவதும் ஜென்னி-மார்க்ஸின் குழந்தைகளுக்கு விட்டு சென்றவர்
ஏங்கல்ஸ். இப்படிப்பட்ட நட்பு அரிதினும் அரிது.
காரல் மார்க்ஸ் - பிடெரிக் ஏங்கல்ஸ் என்றாலே நரைத்த
தாடியுடன் தோன்றும் இருவரின் முகமும், பெரிய சிந்தனைவாதிகள் என்றாலே நரைத்த முடியுடன் இருப்பார்கள்
என்கிற எண்ணமும் இந்தத் திரைப்படத்தை கண்டபின் மாறும். இன்றைய இளைஞர்கள் அனைவரும்
நல்ல நட்பு எது? நல்ல நட்பு என்ன செய்யும் என்பதை அறிய அவசியம் பார்க்க வேண்டய படம் "THE
YOUNG KARL MARX ".
காரல் மார்க்ஸ் - பிடெரிக் ஏங்கல்ஸ் இருவரும்
இணைந்து 21 பிப்ரவரி 1848-இல்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதி வெளியிட்ட போது கார்ல் மார்க்ஸின் வயது 30, ஏங்கல்சின் வயது 28.
Superb......
ReplyDeleteநன்றி
Deleteவடிவமைப்பிலும் கவனம் செலுத்துக
ReplyDeleteஉள்ளடக்கம் எவ்வளவு முக்கியமோ, அதற்குச் சற்றும் குறையாத முக்கியத்துவமுடையது அதன் வெளிப்பாடு.அது பேச்சாயினும் எழுத்தாயினும்.
தோசைகூட ருசியோட, பாக்கவும் மொறுமொறுன்னு இருந்தா கூட ரெண்டு இழுக்கும்ல?
நன்றி அப்பா! அவசியம் விரைவில் கற்றுக்கொள்கிறேன்!
ReplyDelete